2019 – 2020 கல்வியாண்டின் வெளி விளையாட்டு போட்டி நிகழ்வுகள்

31.07.2019 – திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் ‘D’ Zone கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் நமது கல்லூரி மாணவர்கள் 5 பேர் கலந்து கொண்டனர்.

04.08.2019 – மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டியில் நமது கல்லூரி மாணவர்கள் 5 பேர் கலந்து கொண்டனர் .

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் நமது கல்லூரி மாணவர்கள் 5 பேர் கலந்து கொண்டனர் .

திருத்தங்கல் ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான கோ கோ போட்டியில் நமது கல்லூரி மாணவர்கள் 12 பேர் கலந்து கொண்டனர் .

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற ‘D’ Zone கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற மட்டை பந்து போட்டியில் 16பேர் கொண்ட மாணவரணி கலந்து கொண்டது .

ராஜபாளையம் ஸ்ரீ பால கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற ‘D’ Zone கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டியில் 12பேர் கொண்ட குழு நமது கல்லூரி சார்பாக கலந்து கொண்டது .

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற ‘D’ Zone கல்லூரிகளுக்கு இடையிலான கைப் பந்து போட்டியில் நமது கல்லூரி சார்பாக 16பேர் கொண்ட குழு பங்கேற்றது .

திண்டுக்கல் G.T.N கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆணழகன் போட்டியில் எமது கல்லூரி மாணவர் V. வசந்த் கலந்து கொண்டார் .

உசிலம்பட்டி PMT கல்லூரியில் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஜூடோ போட்டியில் நமது கல்லூரி மாணவ மாணவிகள் 5பேர் கலந்து கொண்டனர் .

திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்களுக்கு கபடி போட்டியில் 12பேர் கொண்ட மாணவியர் குழு கலந்து கொண்டது .

மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்களுக்கு கோ கோ போட்டியில் 12பேர் கொண்ட மாணவியர் குழு கலந்து கொண்டது .

மதுரை எம் ஜி ஆர் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டியில் 14பேர் கலந்து கொண்டனர் .

D’ Zone போட்டியில் தேர்வான மாணவர்கள்

மதுரை SVN கல்லூரியில் நடைபெற்ற interzone கோ கோ போட்டியில் S.அருண்பாண்டியன் என்ற வரலாற்றுத்துறை மாணவர் ‘D ‘ zone சார்பாக விளையாடினர் .

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற interzone மட்டைப்பந்து போட்டியில் S. துரைப்பாண்டி (ஆங்கிலத்துறை மாணவர் ) S. முத்துச்செல்வம் (ஆங்கிலத்துறை மாணவர் ), S. செல்வகணேஷ் (கணிதத்துறை மாணவர் ) ஆகிய மூவரும் ‘D’ zone சார்பாக விளையாடினார்கள் .

V. வசந்த் என்ற மாணவர் பல்கலைக்கழக அளவில் ஆணழகன் போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டிச்சென்றார் .

K.லக்ஷ்மி பிரியா என்ற மாணவி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஜுடோ போட்டியில் முதல் இடத்தை பிடித்தார் (தங்கப்பதக்கம் வென்றார் )

K.லக்ஷ்மி பிரியா என்ற மாணவி அனைத்திந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கான்பூர் C.S.J.M பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜுடோ போட்டியில் பங்கேற்றார் .

V. வசந்த் என்ற தமிழ்த்ததுறையைச் சேர்ந்த மாணவர் Mr.Virudhunagar என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்