2019-2020ஆண்டு விளையாட்டு நிகழ்வுகள்

2019 – 2020 ஆம் கல்வியாண்டில் விளையாட்டு துறையின் சார்பாக மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன . மாணவ மாணவிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன .

மாணவர்களுக்கு கோ-கோ , கபடி , கையுந்து பந்து , மட்டைப்பந்து , இறகு பந்து சதுரங்கம் போன்ற குழு விளையாட்டுகளும் , 100மீ , 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, 5000மீ, நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல் , வட்டு எறிதல் , ஈட்டி எறிதல் , 4 x 100மீ தொடர் ஓட்டம் முதலிய தனி விளையாட்டுகளும் நடத்தப்பட்டன .

மாணவிகளுக்கு கோ-கோ , கபடி , எறி பந்து , வளைப்பந்து , இறகு பந்து, சதுரங்கம் போன்ற குழு விளையாட்டுகளும் , 100மீ , 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, 3000மீ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் , வட்டு எறிதல் , ஈட்டி எறிதல் போன்ற தனி விளையாட்டுகளும் நடத்தப்பட்டன .

ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு கேரம் , சதுரங்கம் , கையுந்து பந்து, மட்டைப்பந்து , எறிபந்து , வளையப்பந்து போன்ற குழு விளையாட்டுகளும் நடத்தப்பட்டன .

பாரம்பரிய விளையாட்டுகளை நினைவூட்டும் வகையில் மாணவர்களுக்கு கோலிக்குண்டு அடித்தல் , மாணவிகளுக்கு தட்டங்கல் , பெண் ஆசிரியர்களுக்கு பல்லாங்குழி , ஆண் ஆசிரியர்களுக்கு பானை உடைத்தல் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டன .

குழு விளையாட்டுகளில் 500 மாணவ மாணவிகளும் சதுரங்கப் போட்டியில் 180 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

குழு விளையாட்டு மாணவர்களில் பச்சை நிற அணியினரும் மாணவிகளில் நீல நிற அணியினரும் கோப்பையை தட்டிச் சென்றனர் .

தனி விளையாட்டில் மாணவர்களில் K .ஜீவன் என்ற மாணவனும் K. லக்ஷ்மி பிரியா என்ற மாணவியும் சிறந்த வீரர்களுக்கான கோப்பையை வென்றனர்.